பிளாஸ்டிக் சர்ஜரியால் விகாரமான முகம்.. வீட்டை விட்டு வெளியே வர மறுக்கும் நடிகை..!

பிளாஸ்டிக் சர்ஜரியால் விகாரமான முகம்.. வீட்டை விட்டு வெளியே வர மறுக்கும் நடிகை..!

சமீப காலமாக ஒரு பிரபல சீரியல் நடிகை பற்றிய கிசுகிசுக்கள் இணையத்தில் பரவி வருகின்றன. கடவுள் பெயரை கொண்ட அந்த நடிகை, சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர்.

எந்தப் பாடல் ட்ரெண்டானாலும், அதற்கு கவர்ச்சியான நடனமாடி ரசிகர்களைக் கவர்வது அவரது வழக்கம். இந்த பிரபலத்தின் மூலம் அவருக்கு சினிமா வாய்ப்புகளும் குவிந்தன.

ஆரம்பத்தில் சற்று பருமனாக இருந்த அவர், சினிமா ஹீரோயின் ஆன பிறகு உடல் எடையை குறைத்தார். உடல் எடை குறைந்ததால் அவரது கவர்ச்சி குறைந்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

கடவுள் நடிகையின் கிளாமரே அவருடைய புஸ்டியான உடல்வாகுதான். மேலும், தனது முகத் தோற்றத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்து உதட்டுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.

இந்த பிளாஸ்டிக் சர்ஜரி அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவரது உதடு வழக்கத்திற்கு மாறாக பெரிதாகி, முகம் வீக்கம் மற்றும் கொப்புளங்களுடன் விகாரமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில், அவரைப் பார்க்கச் சென்ற தோழி ஒருவர், அவரது நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்து மற்ற தோழிகளிடம் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக அந்த நடிகை சமூக வலைத்தளங்களில் தனது முகத்தைக் காட்டவில்லை. வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அவரது ரசிகர்கள், «நல்லா இருந்த முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி என்ற பெயரில் இப்படி ஆக்கிக் கொண்டாரே» என்று வருத்தப்படுகிறார்கள்.

இந்த கிசுகிசுக்கள் உண்மையா இல்லையா என்று அடுத்தடுத்த நாட்களில் தெரிய வந்துவிடும். ஆனால், சமூக வலைத்தளங்களில் இது வேகமாக பரவி வருகிறது. இந்த நடிகை யார்..? என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் பிளாஸ்டிக் சர்ஜரியின் ஆபத்துகளை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.

LATEST News

Trending News