நாளை நடைபெறும் ‘அமரன்’ படத்தின் 100வது நாள் வெற்றி விழா!

நாளை நடைபெறும் ‘அமரன்’ படத்தின் 100வது நாள் வெற்றி விழா!

அமரன் படத்தின் 100வது நாள் வெற்றி விழா நாளை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.நாளை நடைபெறும் 'அமரன்' படத்தின் 100வது நாள் வெற்றி விழா!

 

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார்.நாளை நடைபெறும் 'அமரன்' படத்தின் 100வது நாள் வெற்றி விழா!மேலும் இவர்களுடன் இணைந்து கீதா கைலாசம், ராகுல் போஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படமானது மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனும், சாய் பல்லவியும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தனர். இப்படம் வெளியான நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று வந்தது. அதே சமயம் ஜி.வி. பிரகாஷின் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.நாளை நடைபெறும் 'அமரன்' படத்தின் 100வது நாள் வெற்றி விழா!இந்நிலையில் இந்த படத்தின் 100வது நாள் வெற்றி விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது. அதன்படி அமெரிக்கா சென்றிருந்த கமல்ஹாசன் சமீபத்தில் இந்தியா திரும்பிய நிலையில் நாளை (பிப்ரவரி 14) மாலை கலைவாணர் அரங்கத்தில் அமரன் 100வது நாள் வெற்றி விழா நடைபெற இருக்கிறது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

LATEST News

Trending News