அதர்வாவின் புதிய படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளர்…. யார் தெரியுமா?

அதர்வாவின் புதிய படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளர்…. யார் தெரியுமா?

அதர்வாவின் புதிய படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.அதர்வாவின் புதிய படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளர்.... யார் தெரியுமா?தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் அதர்வா. அதை தொடர்ந்து இவர் பரதேசி, 100 போன்ற பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் டிஎன்ஏ எனும் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். அதே சமயம் சுதா கொங்கரா, சிவா கார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அதர்வா.அதர்வாவின் புதிய படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளர்.... யார் தெரியுமா?இதை தொடர்ந்து இவர் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார். இந்த படத்தை இட்லி கடை, பராசக்தி, STR 49 ஆகிய படங்களை தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்தது இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அதர்வாவுடன் இணைந்து பிரபல இசையமைப்பாளர் தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (பிப்ரவரி 13) வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

LATEST News

Trending News