சிம்புவுக்கு அதுல சுத்தமா விருப்பமே இல்ல…. அஸ்வத் மாரிமுத்து பேட்டி!

சிம்புவுக்கு அதுல சுத்தமா விருப்பமே இல்ல…. அஸ்வத் மாரிமுத்து பேட்டி!

இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, சிம்பு குறித்து பேசி உள்ளார்.சிம்புவுக்கு அதுல சுத்தமா விருப்பமே இல்ல.... அஸ்வத் மாரிமுத்து பேட்டி!நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர். இவரது நடிப்பில் தற்போது தக் லைஃப் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இதைத்தொடர்ந்து ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் STR 49, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 50, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் STR 51 ஆகிய அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்நிலையில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, நடிகர் சிம்பு குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.சிம்புவுக்கு அதுல சுத்தமா விருப்பமே இல்ல.... அஸ்வத் மாரிமுத்து பேட்டி!

 

அதாவது அஸ்வத் மாரிமுத்து, ஓ மை கடவுளே படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கான ப்ரோமோஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும் ட்ரெய்லரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற ஏன்டி விட்டுப் போன எனும் பாடலை நடிகர் சிம்பு பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News