இதை என்னால் நம்பவே முடியவில்லை தங்கச்சி…. பவதாரிணி குறித்து வெங்கட் பிரபு உருக்கம்!

இதை என்னால் நம்பவே முடியவில்லை தங்கச்சி…. பவதாரிணி குறித்து வெங்கட் பிரபு உருக்கம்!

பவதாரிணி குறித்து வெங்கட் பிரபு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதை என்னால் நம்பவே முடியவில்லை தங்கச்சி.... பவதாரிணி குறித்து வெங்கட் பிரபு உருக்கம்!

 

இந்தியாவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. ‘புலிக்குப் பிறந்தது பூனையாகாது’ என்பதைப் போல் இவருடைய மகன்களான கார்த்திக் ராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும், ஒரே ஒரு செல்ல மகளான பவதாரிணியும் திரைத்துறையில் பல சாதனைகளை படைத்துள்ளனர். அதிலும் பவதாரிணி, தன்னுடைய மென்மையான புல்லாங்குழலை போன்ற குரலினால் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்தவர். அந்த வகையில் “மயில் போல பொண்ணு ஒண்ணு” என்ற பாடலை இப்போது கேட்டாலும் கூட நம் மனதில் பட்டாம்பூச்சி பறக்கும். அந்த அளவிற்கு அந்த பாடல் பல ரசிகர்களின் பேவரைட் பாடல் ஆகும். இந்தப் பாடலை பாடியிருந்த பவதாரிணி, தேசிய விருதினையும் வென்றிருந்தார். அடுத்தது அழகி, தாமிரபரணி, அனேகன் ஆகிய படங்களில் பாடல்களை பாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார் பவதாரிணி. அத்தகைய தனித்துவமான குரலால் நம் மனதை வருடிய பவதாரிணி இன்று உயிரோடு இல்லை என்பதை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. அதேபோல் தான் பவதாரிணியின் குடும்பத்தினரும் அவருடைய பிரிவை எண்ணி தாங்க முடியாத துயரத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், பவதாரிணியின் பிறந்த நாளான இன்று (பிப்ரவரி 12) அவருடைய சகோதரர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

LATEST News

Trending News