விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம்…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!
விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சிகரம் தொடு, இவ வேற மாதிரி, இது என்ன மாயம், வெள்ளைக்காரதுரை ஆகிய படங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் தெலுங்கில் அனுஷ்காவுடன் இணைந்து காட்டி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் தமிழ் இயக்கத்தில் வெளியான டாணாக்காரன் திரைப்படத்தில் நடித்து பெயர் பெற்றார். தற்போது இந்த கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்திருக்கிறது. அதாவது டாணாக்காரன் படத்தின் இயக்குனர் தமிழ் எழுதியுள்ள கதையில் விக்ரம் பிரபு நடிக்க உள்ளார். இந்தப் படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுரேஷ் இயக்குகிறார்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகிறது. இதனை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று (பிப்ரவரி 10) பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இனிவரும் நாட்களில் படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.