ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

 

தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜயின் மகன் தான் ஜேசன் சஞ்சய் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். அதன்படி ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தை லைக்கா நிறுவனத்தின் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே படக்குழுவினர் சார்பில் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில் இப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக தொடங்கப்படாமல் இருந்து வந்தது.ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் சமீபத்தில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படப்பிடிப்பில் சந்திப் கிஷனின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் அப்டேட் கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களில் படத்தில் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களும் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடர்பான தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News