இன்று வெளியாகும் ‘சித்தார்த் 40’ படத்தின் டைட்டில் டீசர்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சித்தார்த் 40 படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த்.இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது நடிப்பில் வெளியான சித்தா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து இவரது நடிப்பில் மிஸ் யூ எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இவரது நடிப்பில் டெஸ்ட் போன்ற படங்கள் உருவாகி இருக்கின்றன. இதற்கிடையில் இவர், எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் ஆகிய படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் தன்னுடைய 40வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அதன்படி தற்காலிகமாக சித்தார்த் 40 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த்துடன் இணைந்து மீதா ரகுநாத், சைத்ரா ஆச்சர், சரத்குமார், தேவயானி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை தயாரித்த சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ஏற்கனவே இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் ஏற்கனவே இந்த படத்திற்கு 3BHK என்று தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள போஸ்டரை பார்க்கும் போதும் இந்த தலைப்பாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.