மாதவன் – நயன்தாரா நடிக்கும் ‘டெஸ்ட்’ ….. டீசர் வெளியீடு!

மாதவன் – நயன்தாரா நடிக்கும் ‘டெஸ்ட்’ ….. டீசர் வெளியீடு!

மாதவன்- நயன்தாரா நடிக்கும் டெஸ்ட் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.மாதவன் - நயன்தாரா நடிக்கும் 'டெஸ்ட்' ..... டீசர் வெளியீடு!

 

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் மாதவன் தற்போது அதிர்ஷ்டசாலி போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர், டெஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை மாதவனுடன் இணைந்து நயன்தாரா, சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சசிகாந்த் இந்த படத்தை இயக்க சக்திஶ்ரீ கோபாலன் இசையமைக்கிறார். விராஜி சிங் கோஹில் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் மாதவன் பயிற்சியாளராகவும், சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும் நடித்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அந்த வகையில் இப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது. இப்படம் விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாகப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீப காலமாக இப்படம் 2025 ஏப்ரல் நல்லது மே மாதத்தில் வெளியாகும் என செய்திகள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News