30 வருடங்களுக்கு பின் மீண்டும் ரீ என்ட்ரி ஆன ராமராஜன் பட நாயகி.. யார் தெரியுமா?

30 வருடங்களுக்கு பின் மீண்டும் ரீ என்ட்ரி ஆன ராமராஜன் பட நாயகி.. யார் தெரியுமா?

தமிழ் திரை உலகில் ராமராஜன் படத்தில் நாயகி ஆக அறிமுகம் ஆகி அதன் பின்னர் பல பிரபலங்களுடன் நடித்த நடிகை, மீண்டும் 30 ஆண்டுகள் கழித்து ஒரு திரைப்படத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

ராமராஜன் நடித்த ’எங்க ஊரு பாட்டுக்காரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சாந்திப்பிரியா. இவர் நடிகை பானுப்பிரியாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

’எங்க ஊரு பாட்டுக்காரன்’ பெற்ற மிகப்பெரிய வெற்றியை அடுத்து அவர் பல தமிழ் படங்களில் நடித்தார் என்பதும் கடந்த 1992 ஆம் ஆண்டு தமிழில் ’உயர்ந்தவர்’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் அதன் பின் அவர் நடிக்கவில்லை. ஆனாலும் ஒரு சில ஹிந்தி படங்களில் அவர் நடித்த நிலையில் 1994 ஆம் ஆண்டு அவர் திரை உலகை விட்டு விலகினார்.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து சாந்திபிரியா தற்போது ’பேட் கேர்ள்’ என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி ஆகியுள்ளார். இந்த படத்தில் அவர் அம்மா கேரக்டரில் நடித்திருப்பதாகவும் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் மீண்டும் நடிப்பது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நான் நடித்த காலங்களில் ஹீரோக்கள் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும், ஆனால் தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் அதிகம் வந்து கொண்டிருப்பது ஆரோக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படம் வெற்றி பெற்றால் இன்னும் சில படங்களில் அவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

LATEST News

Trending News