விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது?
விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் தற்போது ஜனநாயகன் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்க சத்யன் சூர்யன் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், மமிதா பைஜு, நரேன், பிரியாமணி மற்றும் பலர் நடிக்கின்றனர். நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். எனவே தனது 69ஆவது பட ஜனநாயகன் திரைப்படம் தான் கடைசி படம் என அறிவித்திருந்தார். ஆகையினால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் தான் கடந்த குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது வருகின்ற பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்த பாடலானது விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய இருவருக்குமான பாடலாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே இருவரும் இணைந்து பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அந்த படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் செம ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.