“எனக்கு கல்யாணம் நடக்கல.. ஆனா.. அந்த சுகம் தினமும் கிடைக்குது..” நடிகை ஓப்பன் டாக்..!

“எனக்கு கல்யாணம் நடக்கல.. ஆனா.. அந்த சுகம் தினமும் கிடைக்குது..” நடிகை ஓப்பன் டாக்..!

62 வயதை கடந்த நடிகை கோவை சரளா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான வெள்ளி ரதம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் கோவை சரளா. 

அதனை தொடர்ந்து இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 

தற்போது வரை கிட்டத்தட்ட 900-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் கோவை சரளா 15 படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். 

காமெடி நடிகையாக அறியப்படும் இவர் ஒரு காலத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர்களில் பிரம்மானந்தம், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் போன்ற காமெடி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்திருக்கும் இவர் தற்போதும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 

இந்நிலையில் 62 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் பிறக்கும்போது நாம் தனியாகத்தான் பிறக்கிறோம், அதே போல இறக்கும் போதும் தனியாகத்தான் இறக்கிறோம். இடையில் இந்த உறவுகள் எல்லாம் தேவைதானா..? என்று எனக்கு தோன்றியது. 

சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், திருமணமாகி குழந்தைகள் பெற்றுக் கொண்ட பல பெற்றோர்கள் இன்று அந்த குழந்தைகள் கைவிட்டதன் காரணமாக தங்களுடைய வாழ்க்கையை தாங்களே கடந்து வருகிறார்கள். 

எனக்கு யாரையும் சார்ந்து வாழ வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அது எனக்கு பிடிக்கவும் இல்லை. இதுவும் நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கான ஒரு காரணம். என்று கூறினார் நடிகை கோவை சரளா. 

தொடர்ந்து பேசிய அவர் தனக்கே உரிய பாணியில் காமெடியாக ஒரு விஷயத்தையும் பதிவு செய்தார். 

திருமணம் என்பது என்ன..? ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கும்… ஒரு பெண் ஒரு ஆணுக்கும் என தங்களுடைய சந்தோஷம், சுகம், துக்கம், மகிழ்ச்சி இதையெல்லாம் பகிர்ந்து கொள்வது தானே..! 

அப்படி பார்த்தால் என்னை திருமணம் செய்து கொள்ளாத காரணத்தினால் ஒரு நபர் தப்பித்து விட்டார். அதனால் அவர் சந்தோஷமாக இருப்பார் தானே. அந்த நபருக்கு நான் நன்மை தானே செய்திருக்கிறேன். அந்த வகையில் இன்னொருக்கு மகிழ்சியை பகிர்ந்து கொண்ட சுகம் எனக்கு தினந்தோறும் கிடைக்கிறது என நகைச்சுவையாக பேசி இருக்கிறார் கோவை சரளா.

LATEST News

Trending News

HOT GALLERIES