ச்சீ.. ச்சீ.. பட வாய்ப்புக்காக பிரியா பவானி ஷங்கர் செய்யும் வேலை.. இதுக்கு ராதிகா ஆப்தேவே பரவாயில்ல..
நடிகை பிரியா பவானி சங்கர் பட வாய்ப்புக்காக செய்யும் தில்லாலங்கடி வேலை குறித்த பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
ராஜவேலு என்பவரை காதலித்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர் அவருடன் ஒரே வீட்டில் தான் வசித்து வருகிறார். இருவரும் திருமணமே செய்து கொண்டனர். ஆனால், திருமணம் செய்ததை அறிவித்தால் பட வாய்ப்பு கிடைக்காது என்ற காரணத்தினால் நடிகை பிரியா பவானி சங்கர் தனக்கு திருமணமான விஷயத்தை மறைத்து வருகிறார் என்று பேச்சுகள் கிளம்பியுள்ளன.
இதனை தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் உறவினர்களுக்கு கூட தெரியாமல் பாதுகாத்து வருகிறார் என்றும் கோடம்பாக்க வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் தனக்கு திருமணமான விஷயத்தை வெளிப்படையாக அறிவித்திருந்தார். அதுவும் கர்ப்பம் தரித்து குழந்தை பிறந்த பிறகுதான் இதனை அறிவித்திருந்தார் நடிகை ராதிகா ஆப்தே.
ராதிகா ஆப்தே திருமணம் செய்து கொண்டது அவருடைய உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு தெரிந்த ஒரு விஷயம். ஆனால், பிரியா பவானிசங்கரை பொருத்தவரை அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கூட தெரியாமல் என்னுடைய காதலனுடன் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
இது குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் எந்த இடத்திலும் வாய் திறந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
பரவி வரக்கூடிய இந்த தகவல் உண்மையா..? அல்லது பிரியா பவானி ஷங்கரின் மார்க்கெட்டை காலி செய்வதற்கு அவருக்கு போட்டியாக இருக்கும் நபர்கள் கிளப்பிவிடும் வதந்தியா என்பது விரைவில் தெரிய வரும்.
இந்த விஷயத்தை அறிந்த இணையவாசிகள்.. நண்பர்களுக்கு கூட தெரியாமல் திருமணமா..? இதுக்கு ராதிகா ஆப்தேவே பரவால்ல போல இருக்கு என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.