கல்யாணம் ஆன 2வது நாளே.. அதை புடிச்சி இழுத்து.. வலி வேதனை.. விவாகரத்து பற்றி சீரியல் நடிகை பகீர்..!

கல்யாணம் ஆன 2வது நாளே.. அதை புடிச்சி இழுத்து.. வலி வேதனை.. விவாகரத்து பற்றி சீரியல் நடிகை பகீர்..!

சீரியல் நடிகை சந்தியா ஜாகர்லமுடி நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான வம்சம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 

அதற்கு பிறகு பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார். திருமணமாகி இரண்டு ஆண்டுகளில் விவாகரத்து பெற்ற இவர், தன்னுடைய விவாகரத்து பற்றி சமீபத்திய தன்னுடைய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார். 

இது ரசிகர்களை அதிர்ச்சியில ஆழ்த்தியுள்ளது. அவர் கூறியதாவது, இப்போது இருக்கக்கூடிய இந்த புரிதல் இப்போது இருக்கக்கூடிய என்னுடைய அறிவு திருமணமான போது இருந்திருந்தால் திருமணமான இரண்டாவது நாளே நான் விவாகரத்து வாங்கி விட்டு வந்திருப்பேன். 

தேவையில்லாமல் இரண்டு ஆண்டுகள் அந்த உறவை பிடிச்சு.. இழுத்து.. தொங்கி வலி வேதனையில் நான் கஷ்டப்பட்டு இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது. 

எனக்கு விவாகரத்து நடந்த போது எனக்கு குழந்தை கூட இல்லை. எனக்கு திருமணம் முடிந்து நடந்த பிரச்சனைகளின் போது எனக்கு குழந்தைகள் இல்லை. அதனால் விவாகரத்து பெற்று பிரிந்து வந்து விடுவது எனக்கு இன்னும் எளிமையாக இருந்திருக்கும். 

ஏன் இதை கூறுகிறேன் என்றால் சில பேர் குழந்தை பெற்றுக் கொண்டு இந்த குழந்தைக்காக சேர்ந்து வாழ வேண்டுமே.. என பல்லை கடத்திக் கொண்டே இருப்பார்கள். 

அந்த அவசியம் கூட எனக்கு இல்லை. ஆனால், நான் இரண்டு ஆண்டுகள் நீதான் என் உயிர்.. நீதான் என் உலகம்.. என்று பிடித்து தொங்கிக் கொண்டிருந்தேன். இதனால் எனக்கு வலியும் வேதனையும் தான் மிஞ்சியது. 

இப்போது இருக்கக்கூடிய புரிதல் எனக்கு அப்போதே இருந்தால் திருமணம் ஆன இரண்டாவது நாளே நான் விவாகரத்து பெற்றிருப்பேன் என அவர் பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. 

அப்படி இரண்டாவது நாளில் விவாகரத்து செய்துவிடலாம் என்ற முடிவுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் என்றால் அந்த ஒரு நாளில் என்னதான் நடந்தது..? என்ற கேள்வியையும் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர். 

ஒருவருடைய தனிப்பட்ட திருமணம் அவருடைய விவாகரத்து இதில் ரசிகர்கள் கேள்வி எழுப்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்.. சம்பந்தப்பட்ட நபரே தானாக முன்வந்து தன்னுடைய பேட்டி ஒன்றில் இரண்டாவது நாளே விவாகரத்து செய்து இருப்பேன் என்று கூறுகிறார் என்றால் அதற்கு உண்டான காரணத்தையும் கூறினால் பொருத்தமாக இருக்குமே என்ற முறையில் கேள்வி எழுப்புகிறார்கள் ரசிகர்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES