தற்கொலை செய்து கொண்ட சுசித்ரா அப்பா, அம்மா!! அதிரவைக்கும் தகவலை உடைத்த நடிகை கஸ்தூரி..

தற்கொலை செய்து கொண்ட சுசித்ரா அப்பா, அம்மா!! அதிரவைக்கும் தகவலை உடைத்த நடிகை கஸ்தூரி..

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக பிரபலமாகி சுச்சி லீக்ஸ் என்ற அதிரவைக்கும் செயல் மூலம் மிகப்பெரியளவில் பேசப்பட்டவர் பாடகி சுசித்ரா. சில ஆண்டுகளுக்கு சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சுசித்ரா, கணவர் கார்த்திக் குமாரை விவாகரத்து செய்து ஆள் அடையாளமே தெரியாமல் போனார்.

அதன்பின் மீண்டும் வந்த சுசித்ரா, தன் கணவரை பற்றியும் சினிமா நட்சத்திரங்கள் பார்ட்டி நடத்தி கும்மாளம் போட்டதை பற்றியும் பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார். சுசித்ரா இப்படி பேசி வருவது ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தை இந்த விவகாரத்தில் திருப்பி இருக்கிறார். பல்வேறு பிரபலங்களும் சுசித்ராவின் இந்த புகார்கள் குறித்து விளக்கமும் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல நடிகை கஸ்தூரி சுசித்ராவின் நடவடிக்கை குறித்து சில கருத்தினை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். தற்போது தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில் சுசித்ராவின் அப்பா, அம்மா தற்கொலை குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சுசித்ராவிற்கு உடனடியாக ஒரு உதவி தேவைப்படுகிறது. மருத்துவ உதவியோ அல்லது மனநல உதவியோ ஏதோ ஒன்று அவருக்கு தேவை. அவருக்கு தன் குறைகளை சொல்லி அதை தீர்த்துக்கொள்ள சரியான நபர் கிடைக்கவில்லை, அதனால் உடனே அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றோ நான் சொல்லவில்லை.

அவருடைய குறையை சொல்லி பிரச்சனைகளை தீர்த்துக்கொண்டு சாதாரண வாழ்க்கை வாழ வழியை காட்டுவதற்கான ஒரு துணை அவருடன் இல்லை. இதனால் தான் அவர் மீடியாக்களில் பேசுவதற்கு காரணமாக இருக்கிறது. சுசித்ராவின் அம்மா அப்பா எப்படி இருந்தார்கள் தெரியுமா?.. அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

இதிலிருந்து அவருடைய குடும்பம் அடிப்படையில் இருந்து ஏதோ ஒரு பிரச்சனையில் இருந்தும் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் அவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு சென்றிருக்கிறார்கள். அந்த பிரச்சனையை சரி செய்து வழி காட்ட சுசித்ராவிற்கு சரியான ஆளில்லை என்பதால் தான் இப்படி அவர் மீடியாக்களில் பேசி வருகிறார் என்று கஸ்தூரி ஓப்பனாக பேசியிருக்கிறார்.

LATEST News

Trending News