“விரல் அங்கே படவில்லை என்றாலும்.. அந்த உணர்ச்சி அதிகமாக ஊற்றெடுக்கும்..” நடிகை ரேகா நாயர்..!

“விரல் அங்கே படவில்லை என்றாலும்.. அந்த உணர்ச்சி அதிகமாக ஊற்றெடுக்கும்..” நடிகை ரேகா நாயர்..!

பிரபல சீரியல் நடிகை ரேகா நாயர் காதல் கவிதை ஒன்றை உணர்வு பூர்வமாக படிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அதில் அவர் கூறியுள்ளதாவது, காதல் எப்போது அழகாக இருக்கும் தெரியுமா..? நமக்கு பிடித்த ஒருவர் நம்மிடம் பேசாத போது.. இவர் நமக்கு கிடைக்கவே மாட்டார் என்ற சூழ்நிலையிலும் அவரையே தொடர்ந்து நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போது..நமக்கு பிடித்த அந்த மனிதரோடு ஒருநாளும் நம்மால் சேரவே முடியாது எனும் போது.. அந்த காதல் உணர்வு வற்றாத ஒரு அமுத சுரபியாக இருந்து கொண்டே இருக்கும்..

இது நமக்கு கிடைக்கவே கிடைக்காது என தெரிந்தும்.. இவர் நம்முடைய பக்கத்தில் கூட வர மாட்டார் என தெரிந்தும்.. இவருடைய விரல் ஒருபோதும் என்னை தீண்டாது.. சீண்டாது.. எனத் தெரிந்தும் நாம் காதலித்துக் கொண்டே இருப்போம் அல்லவா.. அதுதான் உண்மையான காதல்..

அந்த காதல் மிகவும் அழகாய்.. ஆழமாய்.. சொல்ல முடியாத ஒரு உணர்வாய்.. மிகவும் அழகாக ஊற்றெடுக்கும்.

என்னிடம் பலரும் கேட்பார்கள் காதல் கவிதைகளுக்கு பின்னால் ஒரு காதல் இருக்க வேண்டுமே.. என்று.. ஆனால், அதற்கு அவசியமே கிடையாது.

காதலிப்பதற்கு இன்னொரு நபர் தேவையே கிடையாது. காதலிக்க தெரிந்தால் மட்டும் போதும். விடுபடுவது தான் காதல். ஆனால் இங்கே காதல் என்ற சிறைக்குள் பலர் சிக்கி வருகிறார்கள். அந்த சிறையை உடைத்து வெளியே வருவது தான் காதல் என பேசியுள்ளார் நடிகை ரேகா நாயர்.

LATEST News

Trending News