மனைவி கன்னியாக வேணும்ன்னு எதிர்பாக்கதிங்க.. இது இருக்கான்னு மட்டும் பாருங்க.. பிரியங்கா சோப்ரா சர்ச்சை பேச்சு..!

மனைவி கன்னியாக வேணும்ன்னு எதிர்பாக்கதிங்க.. இது இருக்கான்னு மட்டும் பாருங்க.. பிரியங்கா சோப்ரா சர்ச்சை பேச்சு..!

பொதுவாக பிரபலங்களாக இருந்துவிட்டு ஒரு கட்டத்தில் அந்த பிரபலம் மங்கும்போது பொதுவெளியில் தங்களுடைய பிரபலத்தின் மீதான ஈர்ப்பு குறையும் போது ஏதாவது ஒரு சர்ச்சையான விஷயங்களில் சிக்கி மீண்டும் தங்களுடைய பிரபலத்தை மெருகேற்றிக் கொள்வது பிரபலங்களின் வாடிக்கை.

அதிலும் குறிப்பாக சினிமா நடிகைகள் என்றால் சொல்லவே தேவையில்லை.. அதிலும் குறிப்பாக பாலிவுட் நடிகைகள் என்றால் யோசிக்கவே வேண்டாம்.. ஏதாவது ஒரு சர்ச்சையான விஷயத்தை கூச்சநாச்சம் இல்லாமல் வெளிப்படையாக பேசிவிட்டு அதனை சமாளிக்கும் விதமாக ஒப்பேற்றும் விதமாக எகடுதகடான அறிக்கைகளை வெளியிட்டு அந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பார்கள்.

இதன் பயனாக பொதுமக்களுக்கு ஏதாவது நல்லது நடந்ததா..? என்று கேட்டால் ஒரு பைசா பிரயோஜனம் இருக்காது. ஆனால், குறிப்பிட்ட சர்ச்சையை கிளப்பிய நடிகைக்கு மிகப்பெரிய பிரபலம் கிடைத்திருக்கும். அதன் மூலம் அவருக்கு சில பட வாய்ப்புகளும் கிடைத்திருக்கும்.

இதனை காலம் காலமாக பார்த்து வருகிறோம். சினிமா மற்றும் அதனை சுற்றி நடக்கக்கூடிய நடப்புகளை பின் தொடர்ந்து வரும் சினிமா ரசிகர்களுக்கு இந்த விஷயம் நன்றாகவே தெரியும்.

இந்நிலையில், ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் போன நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது, ஆண்கள், தங்களுக்கு வரக்கூடிய மனைவி கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா..? என்ற கேள்வியை விட்டுவிட்டு அவள் சிறந்த குணம் படைத்தவளாக இருக்கிறாளா..? அவருடைய அணுகுமுறை எப்படி இருக்கிறது..? என்பதை மட்டும் பாருங்கள்.

ஏனென்றால் கன்னித்தன்மை ஒரே இரவில் கலைந்து போய்விடும். ஆனால், அவளுடைய குணமும் அணுகுமுறையும் வாழ்க்கை முழுதும் நம்மை பின் தொடர்ந்து வரக்கூடியது. என்று பேசி இருக்கிறார்.

இவருடைய இந்த கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் பொதுவான சினிமா ரசிகர்கள் பலரும் இதற்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

இதே போல நீங்கள் ஒரு ஆணிடம் பணத்தையோ.. பொருளையோ.. வசதி வாய்ப்பையோ எதிர்பார்க்காமல்.. அவனுடைய குணத்தையும் அணுகுமுறையையும் அடிப்படையாகக் கொண்டு அவனை திருமணம் செய்து கொள்வீர்களா..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பிரியங்கா சோப்ராவின் இந்த கருத்து பல்வேறு விவாதங்களை கிளப்பி விட்டு இருக்கிறது. இது குறித்து உங்களுடைய கருத்தை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யலாம்.

LATEST News

Trending News