அப்போ வேற ஒருத்தன் கூட போயிட்டேன்.. இப்போ நான் உனக்கு வேணுமா..? கனிகா வீடியோ..!
இணைய பக்கங்களில் ஆக்டிவா இருக்கக்கூடிய ஆசாமி நடிகை கனிகா. திரைப்படங்கள் சீரியல்கள் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
என்றாலும் கூட, இணைய பக்கங்களிலும் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொள்வதன் மூலம் ரசிகர்களுடன் இன்னும் நெருக்கமாக தொடர்கிறார்.
அவ்வப்போது கேளிக்கையான வீடியோக்களை வெளியிடும் இவர் தற்போது நகைச்சுவையான வசனம் ஒன்றுக்கு வீடியோ வெளியிட்டுள்ளார்.
20 வயதில் இருக்கும் போது அனைவரையும் ரிஜெக்ட் செய்தேன். ஆனால், தற்போது 40 வயதாகிறது. இப்போது இப்படித்தான் பேச வேண்டும் என்று கேப்ஷன் வைத்து இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். இவர் பேசும் வசனமானது.. உனக்கு நினைவிருக்கிறதா..? உனக்கு நான் தேவைப்பட்டபோது.. நீ எனக்கு தேவைப்படவில்லை.. அந்த நேரத்தில் எனக்கு தேவைப்பட்ட ஒருவருக்கு நான் தேவைப்பட்டேன்.
ஆனால் தற்போது அவருக்கு நான் தேவைப்படவில்லை. இன்னும் நான் உனக்கு தேவைப்படுகிறேனா..? என்று பேசும் அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.