காதலருடன் விரைவில் திருமணம்!! இப்படியொரு செயலை செய்யப்போகும் நடிகை கீர்த்தி சுரேஷ்..
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவானுடன் பேபி ஜான் படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
தற்போது கீர்த்தி சுரேஷ் பாலிவுட் சினிமாவில் நடித்துள்ள பேபி ஜான் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. அப்பாடலில் இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமரில் ஆட்டம் போட்டுள்ளார் கீர்த்தி.
நடிகை கீர்த்தி சுரேஷ் பல ஆண்டுகளாக காதலித்து வந்த ஆண் நண்பரை தான் திருமணம் செய்யவுள்ளார் என்றும் 15 ஆண்டுகளாக அந்தோனி தட்டில் என்ற ஆண் நண்பவரை கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும் டிசம்பர் மாதம் திருமணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆண்டனி தட்டில் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் கீர்த்தி சுரேஷ் அவருக்காக மதம் மாறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.