சரிந்து விழுந்த மேடை!! நூலிழையில் தப்பித்த நடிகை பிரியங்கா மோகன்..

சரிந்து விழுந்த மேடை!! நூலிழையில் தப்பித்த நடிகை பிரியங்கா மோகன்..

கன்னட சினிமாவில் அறிமுகமாகி வாய்ப்பு பெற்று பிரபலமான நடிகை பிரியங்கா மோகன் நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து டாப் நடிகையாக மாறினார்.

சரிந்து விழுந்த மேடை!! நூலிழையில் தப்பித்த நடிகை பிரியங்கா மோகன்.. | Stage Collapses During Event Actress Priyankamohan

அதன்பின் எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவுள்ள பிரதர் படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.

தெலுங்கில் நடிகர் நானி நடிப்பில் உருவாகி வெளியான சரிபோதா சனிவாரம் படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், தெலுங்கான தொரூரில் நடைபெற்ற கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரியங்கா மேடையில் நின்று கொண்டிருந்த போது, திடீரென மேடை சரிந்துவிழுந்துள்ளது.

சரிந்து விழுந்த மேடை!! நூலிழையில் தப்பித்த நடிகை பிரியங்கா மோகன்.. | Stage Collapses During Event Actress Priyankamohanஎந்த காயமும் இன்றி நூலிழையில் தப்பித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, தான் நலமுடன் இருப்பதாகவும் காயமுற்ற பிறர் விரைந்து குணமடைய வேண்டுவதாகவும் எக்ஸ் தளத்தில் பதிவில் தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News