விரைவில் உன்னை சந்திக்கின்றேன்: மறைந்த தோழிக்கு உருக்கமான பதிவு செய்த யாஷிகா!

விரைவில் உன்னை சந்திக்கின்றேன்: மறைந்த தோழிக்கு உருக்கமான பதிவு செய்த யாஷிகா!

விரைவில் மறுபக்கத்தில் உன்னை சந்திக்கிறேன் என மறைந்த தோழிக்கு உருக்கமான இன்ஸ்டாகிராம் பதிவை நடிகை யாஷிகா செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாஷிகா தனது தோழி பவனிஷெட்டியுடன் காரில் சென்றபோது கார் விபத்துக்குள்ளானது என்பதும் இந்த விபத்தில் பவனிஷெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று மறைந்த தனது தோழியின் பிறந்த நாளை அடுத்து யாஷிகா உருக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், ‘ நீ மனித உருவில் சூரிய ஒளியால் இருந்தாய். பல ஆண்டுகளாக உன்னிடம் நான் பழகி நன்றியுள்ளவளாக இருந்திருக்கிறேன். இன்று உனக்கு பிறந்தநாள். ஆனால் நீ இங்கு இல்லை என்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. இதற்கு காரணம் நான் என்பதை நினைக்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

உன்னுடைய சிரிப்பை நான் மிஸ் செய்கிறேன், உன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளின் போது உன்னுடைய முகத்தை நான் பார்த்து மகிழ்வேன். நீ அமெரிக்காவில் வேலை செய்துகொண்டு இருந்த போது நமக்குள் நடந்த உரையாடல்கள் இப்போதும் என் கண்முன் வருகின்றன.

உன்னுடைய குழந்தைத்தனமான பேச்சை நான் ரசித்தேன். என் வாழ்க்கையில் உன்னை நான் நம்பிய அளவுக்கு வேறு யாரையும் நம்புவதில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும்போது எனக்கு புத்தி சொன்னாய், என் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளிலும் நீ இருந்திருக்கிறாய். பல வழிகளில் எனக்கு துரோகம் செய்தவர்கள் மத்தியில் நீ ஒருவள் மட்டுமே உண்மையாக இருந்தாய். என்னுடன் நீ ஒருமுறை கூட சண்டை போட்டது இல்லை.

நீ இப்போது வானத்தில் நட்சத்திரமாய் இருக்கிறாய், என்னை வழிநடத்தி வருகிறாய், உன்னுடைய ஒவ்வொரு கனவையும் நான் நிறைவேற்ற விரும்புகிறேன். நீ இல்லாமல் உனது குடும்பம் தவிக்கும் வேதனையை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. என்னிடம் ஒன்றும் இல்லாத காலத்தில் இருந்து நீ என்னுடன் உள்ளாய். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி, விரைவில் மறுபக்கத்தில் உன்னை சந்திக்கிறேன்! என்று நெகிழ்ச்சியாக நடிகை யாஷிகா பதிவுசெய்துள்ளார். இந்தப்பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES