இன்ஸ்டாகிராமில் விஜய் தேவரகொண்டா செய்த சாதனை!

இன்ஸ்டாகிராமில் விஜய் தேவரகொண்டா செய்த சாதனை!

பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவர் கொண்டா இன்ஸ்டாகிராமில் செய்த சாதனையை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலக நடிகர் நடிகைகள் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து நடிகர் நடிகைகளும் இன்ஸ்டாகிராமில் கணக்குகள் தொடங்கி தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார்கள் என்பதும் இதன் மூலம் நடிகர் நடிகைகளுக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் குவிந்து வருவார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் குறைந்த நாட்களிலேயே 13 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை பெற்று விஜய் தேவரகொண்டா சாதனை செய்துள்ளார். தென்னிந்திய நடிகர்களில் மிகக் குறைந்த நாட்களில் 13 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற முதல் நடிகர் என்ற பெருமையை விஜய்தேவரகொண்டா பெறுகிறார் என்பது குறிப்பிடதக்கது. இன்ஸ்டாகிராமில் செய்த சாதனையை அடுத்து அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய்தேவரகொண்டா தற்போது ’லைகர்’ என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை பூரி ஜெகநாதன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES