முக்கியக் காட்சிகளை படமாக்கி முடித்த செல்வராகவன்ம்… நானே வருவேன் அப்டேட்!

முக்கியக் காட்சிகளை படமாக்கி முடித்த செல்வராகவன்ம்… நானே வருவேன் அப்டேட்!

நானே வருவேன் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கி முடித்துள்ளார் செல்வராகவன்.

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் புதிய படம் நானே வருவேன். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் செல்வராகவனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான அரவிந்த் கிருஷ்ணாவும் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தில் இணைந்தார்.
 

ஆகஸ்ட் மாதமே தொடங்க இருந்த படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டு வந்த நிலையில் இப்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இநிலையில் முடிந்துள்ள முதல் கட்ட படப்பிடிப்பில் முக்கியமானக் காட்சிகளை செல்வராகவன் படமாக்கி முடித்துவிட்டாராம். மேலும் தொடர்ந்து நடக்கும் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் முடிய உள்ளதாம்.

LATEST News

Trending News