வாய் தவறி சொல்லிட்டேன்.. சமந்தாவை அசிங்கப்படுத்திட்டு பேக் அடித்த தெலுங்கானா அமைச்சர்..
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது இந்தியா முழுவதும் பெரியளவில் பேசப்பட்டு வரும் விஷயம் தான் சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து குறித்து பெண் அமைச்சர், கொண்டா சுரேகா சர்ச்சைக்குரிய கருத்தினை கூறியிருந்ததார். இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சமந்தா இதற்கு கண்டித்து ஒரு பதிவினை பகிர்ந்திருந்தார்.
மேலும் சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து குறித்து அமைச்சர் பேசியதற்கு நாகர்ஜுனா, நாக சைதன்யா, நானி, ஜூனியர் என் டிஆர், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் அமைச்சரை கண்டித்தனர். கே.டி.ஆர் தரப்பில் அமைச்சருக்கு 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் கொண்டா சுரேகா, நான் சமந்தா குறித்து பேசியது தொடர்பாக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நான் வாய்தவறி சொல்லிவிட்டேன், சமந்தா விஷயத்தில் நன்கு உறுதிப்படுத்தப்படாத தகவலை சொல்லிவிட்டேன். அதற்காக வருந்துகிறேன்.
கே.டி.ஆர் மீதான எனது விமர்சனங்கள் தொடரும் என்றும் அவரை சட்டப்படி எதிர்கொள்ளவும் தயாராக இருப்பதாகவும் கொண்டா சுரேகா தெரிவித்துள்ளார். ஒரு அமைச்சரின் இந்த பதிவு அரசியல் குறித்து என்றாலும் சமந்தா பற்றிய கருத்து தேவையற்ற பேச்சு என்றும் பலரும் அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.