மனைவியுடன் விவாகரத்து பிரச்சனை!! பிரபல நடிகையுடன் திருமண கோலத்தில் ஜெயம் ரவி..
ஜெயம் ரவி குறித்து தான் கடந்த சில நாட்களாக இணையத்தில் செய்திகள் உலா வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அவர் தன் மனைவியை விவாகரத்து செய்கிறேன் என்று அறிக்கை விட்டது தான். அதை விட அவரின் மனைவி ஆர்த்தி என்னிடம் கேட்காமலேயே ரவி இந்த அறிக்கையை விட்டுள்ளார், எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று கூறினார்.
இதனால் இரு தரப்பிலும் காரசார விவாதங்கள் நடந்ததோ இல்லையோ, யுடியூபில் பல சேனல்களில் நடந்து முடிந்துவிட்டது. இதுகுறித்து ஜெயம் ரவி விளக்கம் கொடுத்து வந்த நிலையில் சமீபத்தில், நான் விவாகரத்து குறித்து சொன்ன வார்த்தைகள் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது.
எனக்கு இதில் உடன்பாடு இல்லை, நான் அவருடன் தனியாக பேச வேண்டும் என்று ஆர்த்தி மேலும் ஒரு பதிவினை பகிர்ந்திருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவியுடன் திருமண கோலத்தில் நடிகை பிரியங்கா மோகன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் அப்புகைப்படம் ஜெயம் ரவி - பிரியங்கா மோகன் நடித்த பிரதர் படத்தில் எடுக்கப்பட்ட ஒரு காட்சி என்று கூறப்படுகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.