வார்த்தை தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது, மீண்டும் குண்டை தூக்கி போட்ட ஜெயம் ரவி மனைவி
ஜெயம் ரவி குறித்து தான் கடந்த சில நாட்களாக இணையத்தில் செய்திகள் உலா வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அவர் தன் மனைவியை விவாகரத்து செய்கிறேன் என்று அறிக்கை விட்டது தான்.
அதை விட அவரின் மனைவி ஆர்த்தி என்னிடம் கேட்காமலேயே ரவி இந்த அறிக்கையை விட்டுள்ளார், எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று கூறினார்.
இதனால் இரு தரப்பிலும் காரசார விவாதங்கள் நடந்ததோ இல்லையோ, யுடியூபில் பல சேனல்களில் நடந்து முடிந்துவிட்டது
இந்நிலையில் ரவியே சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இதுக்குறித்து பேசினார், அவரும் அந்த விவாகரத்து நோட்டிஸை கையெழுத்து போட்டு தான் பெற்றுக்கொண்டார்.
இப்போது வந்து தெரியவில்லை என்று சொல்வது புரியவில்லை என்றார், தற்போது ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி, நான் விவாகரத்து குறித்து சொன்ன வார்த்தைகள் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது.
எனக்கு இதில் உடன்பாடு இல்லை, நான் அவருடன் தனியாக பேச வேண்டும் என்று கூறி மீண்டும் இதை தொடங்கி வைத்துள்ளார்.