பிக் பாஸ் ஷெட்டில் திடீர் விபத்து... வழக்கு பதிவு செய்து விசாரிக்கும் பொலிசார்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக செட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதில் பணி செய்த ஊழியர் ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் அதிகமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் இந்நிகழ்ச்சி தற்போதும் மக்களுக்கு பிடித்த நிகழ்ச்சியாக இருந்து வருகின்றது.
இந்நிகழ்ச்சியில் முதல் சீசன் முதல் கடந்த ஆண்டு நிறைவடைந்த 7வது சீசன் வரை கமல்ஹாசன் தான் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய நிலையில், தற்போது விஜய் சேதிபதி எண்ட்ரி கொடுத்துள்ளார்.
அக்டோபர் மாதம் 6ம் தேதி மாலை 6மணிக்கு பிரம்மாண்டமாக இந்நிகழ்ச்சி ஆரம்பமாகின்றது. இதனால் இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட செட் அமைக்கும் பணி, செம்பரம்பாக்கத்தை அடுத்துள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகின்றது.
இதில் இந்த ஆண்டுக்கான, பிக்பாஸ் செட் அமைக்கும் பணியில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், வடமாநில ஊழியர் ஒருவர் 20 அடி உயரத்திலிருந்து, கீழே விழுந்துள்ளார்.
அவருக்கு கை மற்றும் இடுப்பு எலும்பு உடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கீழே விழுந்த நபர் உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 46 வயதான முகமது ஷாஹில் கான் என்பது தெரியவந்துள்ளது.