என்னது குக் வித் கோமாளிக்கு புதிய தொகுப்பாளரா? மணிமேகலை இடத்தில் யார் தெரியுமா
சின்னத்திரையில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதில் மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில், பல சர்ச்சைகள் வெடித்துள்ளது.
பிரியங்கா தான் மணிமேகலை வெளியேறுவதற்கு காரணம், பிரியங்காவால் இதுவரை பலரும் விஜய் டிவியில் இருந்து வெளியேறியுள்ளனர், மணிமேகலை இதற்கு முன் கூட நிகழ்ச்சியில் இருந்து இருந்து வெளியேறியுள்ளார், என பல சர்ச்சைகள் பேசப்பட்டு வருகிறது.
அதே போல் மணிமேகலைக்கு சிலர் துணை நின்று பேசி வந்தாலும், பிரியங்காவிற்கும் துணை நின்று விஜய் டிவி பிரபலங்கள் பேசி வருகிறார்கள். அப்படி பேசுபவர்களை சோம்பு என்றும் மணிமேகலை கலாய்த்தார்.
இப்படி போய்க்கொண்டு இருக்கும் நேரத்தில், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு புதிய தொகுப்பாளர் வரப்போகிறார் என விஜய் டிவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஆனால், அது யார் என தெரியவில்லை.
இந்த நிலையில், தற்போது வெளிவந்துள்ள குக் வித் கோமாளி ப்ரோமோவில் விடிவி கணேஷ், புகழ் உள்ளிட்டோர் நகைச்சுவையாக வந்து நிகழ்ச்சியை ரக்ஷனுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள்.