ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல நடிகையை கதற விட்ட ஸ்டார் நடிகர்
மலையான நடிகை மினு முனீர், நடிகர் ஜெயசூர்யா படப்பிடிப்பு தளத்தில், தன்னை கட்டிப்பிடித்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என்று புகார் கூறியிருந்தார். இந்த புகார் குறித்து வாய் திறக்காமல் இருந்த ஜெயசூர்யா, அறிக்கையின் மூலம் விளக்கம் கொடுத்துள்ளார்.
மலையாளத் திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயசூர்யா. சின்னத்திரையில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய இவர். அதே தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படத்தில் நடித்து பிரபலமான இவர் பல விருதுகளையும் பெற்றுள்ள இவர், கமல்ஹாசன் நடித்த வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ஷகீரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில்,ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, மலையான நடிகையான மினு முனீர், நடிகர் ஜெயசூர்யா மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். 2008ம் ஆண்டு வெளியான, ஏய் எங்கோட்டு நோக்கியே என்ற படத்தின் படப்பிடிப்பு தளத்தில், தன்னை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் திருவனந்தபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு தனியாக வரும் படி தன்னை வற்புறுத்தியதாக புகார் கூறியிருந்தார்.
பிரபல நடிகை கூறிய குற்றச்சாட்டு மலையாள திரையுலகில் பெரும் புயலை கிளப்பிய நிலையில், இதுகுறித்து மௌனம் காத்து வந்த ஜெயசூர்யா தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். அதில், தானும் தனது குடும்பமும் சொந்தக் காரணமாக அமெரிக்காவில் இருப்பதாகவும், இந்த நேரத்தில், தன் மீது இரண்டு பொய்யான பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மனசாட்சி இல்லாதவர்கள் இப்படி ஒரு குற்றத்தை என்மீது சுமத்தி இருக்கிறார்கள், இது மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது.