வளர்ந்த நடிகையையே ரூமுக்கு அழைத்த பிரபல நடிகர்
கேரள திரையுலகில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது ஹேமா கமிட்டி அறிக்கை. பல நடிகைகள் தங்களுக்கு பாலியல் தொல்லை நடந்திருப்பதாக கூறப்படும் சூழலில் AMMAவின் தலைவராக இருந்த மோகன் லால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் குறித்து எதுவுமே பேசாமல் ராஜினாமா செய்த சம்பவம் பல விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்தச் சூழலில் பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் நடிகர் மோகன் லால் குறித்து பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் மோகன் லால். ஏராளமான படங்களில் நடித்திருக்கும் அவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அலட்டிக்கொள்ளாமல் கலக்கும் மோகன் லால் தமிழில் சிறைச்சாலை, ஜில்லா, ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கென்று தமிழிலும் ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். மேலும் மலையாள திரையுலகின் தூண்களில் அவரும் ஒருவர் என்று புகழப்படுவது உண்டு.
அதன் பலனாக மலையாள திரையுலகின் AMMA தலைவராக பதவி வகித்துவந்தார். கடந்த சில வருடங்களாக பதவியில் இருந்த அவர் மீது ஏகப்பட்ட பேர் அதிருப்தியில் இருந்ததாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருந்தது கவனிக்கத்தக்கது. ஆனால் அதெல்லாம் பெரிதாக வெளியே தெரியவில்லை. சூழல் இப்படி இருக்க ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு மோகன் லாலை சுற்றியும் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.
சில வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. கேரள சினிமாவில் இருக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருக்கிறதா என்பது தொடர்பாக விசாரித்தது அந்த கமிட்டி. விசாரித்த பிறகு தனது அறிக்கையை 2019ஆம் ஆண்டு கேரள அரசிடம் சமர்ப்பித்தது. இப்போது அந்த அறிக்கையின் அம்சங்கள் வெளியாகியிருக்கின்றன.
அந்தக் கமிட்டியிடம் ஏராளமான நடிகைகள் தங்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். இது பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. நடிகர் சித்திக், இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் நடிகர் மோகன் லால் வாய் எதுவும் திறக்கவில்லை. மேலும் அவர் AMMAவின் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார். அவர் மீதும் குற்றச்சாட்டு இருக்குமென்பதால்தான் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக பலர் கூறுகிறார்கள். முக்கியமாக அவரை ஒரு கோழை என்று நடிகை பார்வதி விமர்சித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பேசிய மம்மூட்டி, யாராக இருந்தாலும் தண்டிக்கலாம் என்று சொல்லிவிட்டார். ஆனால் நடிகர் சங்க தலைவராக இருந்த மோகன் லால்தான் இதுகுறித்து முதலில் பேசியிருக்க வேண்டும். அவர் மீது நல்ல அபிப்ராயம் இருப்பதாக தெரியவில்லை. மம்மூட்டி மனைவிக்கு பயப்படுபவர். ஆனால் மோகன் லாலோ பெண்கள் விஷயத்தில் நல்லவர் இல்லை என்று சொல்ல முடியாது.
என்னிடம் ஒருவர் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார், ரம்யா கிருஷ்ணனுடன் மோகன் லால் நடிக்கும்போது அவரை ரூமுக்கு அழைத்தார். ஆனால் ரம்யா கிருஷ்ணன் மறுத்துவிட்டார். அதற்கு இந்தப் படம் முடிவதற்குள் உன்னை ரூமுக்கு வர வைக்கிறேனா இல்லையா பார் என்று ரம்யாவிடம் மோகன் லால் சொன்னதாக என்னிடம் கூறினார். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை" என்றார்.