ஊருக்குத்தான் நல்லவர் வீட்டுல அப்படி!! கணவர் பற்றி ஓப்பனாக பேசிய நடிகை

ஊருக்குத்தான் நல்லவர் வீட்டுல அப்படி!! கணவர் பற்றி ஓப்பனாக பேசிய நடிகை

தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை சங்கீதா சமீபத்தில் வாரிசு படத்தில் விஜய்யின் அண்ணியாக நடித்திருந்தார். இதனையடுத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் சங்கீதா, சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழ் சினிமாவை விட தெலுங்கு தான் எனக்கு பிடிக்கும் அங்குதான் எனக்கு மரியாதை கிடைத்தது என்று கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து வேறொரு பேட்டியொன்றில் தன் கணவர் கிரிஷ் குறித்து டான்ஸ் மாஸ்டர் கலாவிடம் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், விருது வழங்கும் நிகழ்ச்சியில் கிரிஷை பார்த்து அவருக்கு சிறந்த பின்னணி பாடகர் விருதை அளித்தேன். அப்போது மிக அழகாக இருப்பதை பார்த்து யார் என்று ஜீவாவிடம் கேட்டேன்.

அந்த சமயம் தனக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலமும் என் வீட்டில் நடந்ததாகவும் கிரிஷை பார்த்தவுடன் வீட்டில்போய் இந்த மாப்பிள்ளை வேண்டும் என்று சொன்னேன். அதன்பின் அவரிடம் உங்களுக்கு என்ன வயது என்று கேட்டேன்.

கிரிஷ் வயது 30 என் வயது 28, ஆனால் மக்கள் கிரிஷ் சின்ன பையன் என்று நினைத்து வயது மூப்புடையவர் என்று நினைத்தார்கள். ஆனால் அது உண்மை இல்லை என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய சங்கீதா திருமணமாகி ஒரு ஆண்டிலேயே எங்களுக்குள் சண்டை அதிகம் வந்ததாகவும் சினிமா பற்றி அவருக்கு எதுவும் தெரியாது அதனால் அதைவைத்து எங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்ததாக்வும் தெரிவித்துள்ளார். ஊருக்கு நல்லவராக இருப்பார்.. வீட்டில் ரொம்ப ஸ்டிரிட்-ஆக இருப்பார் என்றும் கிரிஷ் பற்றி பகிர்ந்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES