ஹோட்டல் ரூமுக்கு அழைத்து தகாதமுறையில் தொட்ட இயக்குநர்
பிரபல வங்காள சினிமா நடிகையான ஸ்ரீலேகா மித்ரா, வங்க மொழியில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இந்தி, மலையாள சினிமாவில் நடித்து வந்த நடிகை ஸ்ரீலேகா கேரள இயக்குநர் பற்றி பரபரப்பு புகாரை அளித்திருக்கிறார்.
கடந்த 2009ல் இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் பலேரி மாணிக்யம். இப்படத்தின் ஆடிஷனுக்காக நடிகை ஸ்ரீலேகா மித்ராவும் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் படத்தை பற்றி இயக்குநர் ரஞ்சித் பேசிக்கொண்டிருக்கையில் தன்னை தகாத முறையில் தொட்டதாகவும் பயந்துபோய் அந்த இடத்தைவிட்டு சென்று படத்தில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்ததாகவும் கூறியிருக்கிறார்.
இயக்குநர் ரஞ்சித்
பாலியல் வன்கொடுமை எதுவும் இல்லை என்று தெளிவுப்படுத்தும் ஸ்ரீலேகா மித்ரா, அதேவேளையில் ரஞ்சித்தின் நடத்தையை பார்க்கும் போது அத்தகைய எண்ணம் இருந்திருக்கலாம் என்ற உணர்வை தனக்கு ஏற்படுத்தியது என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து இயக்குநர் ரஞ்சித், இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவன் நான்தான், நடிகை ஸ்ரீலேகா இதை சட்டப்பூர்வமாக தொடரும் பட்சத்தில் நானும் அதை அப்படியே எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது மலையாள சினிமாவில் மேலும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.