பெண்ணாக மாறி நடிகைக்கு ஷாக் கொடுத்த சீரியல் நடிகர்.. யார்னு தெரியுதானு பாருங்க..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் ஈரமான ரோஜாவே. அந்த தொடர் முடிந்து அதில் நடித்த நடிகர் நடிகைகள் வேறு சீரியல்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த பவித்ரா ஜனனி பழைய நினைவுகள் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பவித்ராவுக்கு ஜோடியாக நடிகர் திரவியம் நடித்த காட்சிகளள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றிருந்தது.
சீரியல் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பவித்ரா வெளியிட்டுள்ள நிலையில் திரவியம் பெண் போல் வேடமிட்டுள்ள புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கு ஷாக் கொடுத்திருக்கிறார். அந்த நடிகரா இது என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேள்வி கேட்டு வருகிறார்கள்.