வயசு பசங்களை சீரழித்ததே அவர் குடும்பம் தான்!! பொங்கிய பிரபல இயக்குனர்..
சினிமாவில் படம் எடுத்து நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று இயக்குனர் கஸ்தூரி ராஜா துள்ளுவதோ இளமை படத்தின் கதை எடுக்க முடிவு செய்தார். அதில் பிரபு என்ற பெயரை மாற்றி தனுஷ் என்று வைத்து தன் மகனை கஸ்தூரி ராஜா அறிமுகப்படுத்தினார். ஆனால் படத்தினை நான் இயக்குகிறேன் என்று கூறி மூத்த மகன் செல்வராகவன் இயக்கினார்.
பல மோசமான காட்சிகள் என்று பலரும் இப்படத்தினை எதிர்த்ததோடு தடை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தனர். ரசிகர்களுக்கு படம் பிடித்துப்போக இது போன்ற படங்களில் நடிகர் தனுஷ் நடிக்க ஆரம்பித்தார். இதுகுறித்து ஜோடி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பிரவீன் காந்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியொன்றில் தனுஷ் குடும்பத்தை மோசமாக பேசியிருக்கிறார்.
வயசு பசங்களை சீரழித்ததே தனுஷ் குடும்பம் தான். துள்ளுவதோ இளமை படத்தில் சினிமாவை கசகசவென ஆக்கி, அப்பனை திட்டுவது, அப்பன் முன்னாடி தண்ணி அடிப்பது, அப்பன் முன்னாடி மகன் தப்பு பண்ணுவது என்று கலாச்சார சீரழிவை சினிமாவில் முதலில் கொண்டு வந்ததே தனுஷ் குடும்பம் தான். கொலை குற்றங்கள் நம் நாட்டில் அதிகமாக காணப்படுகிறது.
அதற்கு காரணம் சினிமாக்காரர்கள் தான். சாதி, வன்மம் எல்லாற்றையும் தனுஷ் படம் தூண்டுகிறது. தனுஷ் புத்திச்சாலி தான், அவரின் சாதனை பெரிது. ஆனால் இவர்கள் எம்ஜிஆரை ரோல் மாடலாக வைத்திருக்க வேண்டும். 50 வது படம் ரொம்பவே கொடுரமாக இருக்கிறது அதை கம்மி பண்ணுங்க என்று பிரவீன் காந்தி விமர்சித்து அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.