கல்யாணத்தில் கலந்துக்க சம்பளம் வாங்கும் பிரபலங்கள்.. என்ன கலாச்சாரம் இது.. விளாசும் நாகர்ஜுனா.. யாரை சொல்றாரு என்று தெரியுமா...
உலகிலேயே அதிக செலவில் நடைபெற்ற திருமணம் எதுவென்று கேட்டால் இப்பொழுது இந்திய மக்கள் அனைவரும் சொல்லும் திருமணம் முகேஷ் அம்பானியின் வீட்டு திருமணமாகதான் இருக்கும். அந்த அளவிற்கு கோடிகளில் இறைத்து தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை நடத்தி இருக்கிறார் முகேஷ் அம்பானி.
தமிழ்நாட்டில் பெரிதாக இது குறித்து பேச்சுகள் இல்லை என்றாலும் கூட பாலிவுட் பக்கம் அதிகமாக முகேஷ் அம்பானி வீட்டில் நடந்த திருமண விசேஷம்தான் பேச்சாக இருந்து வந்தது. முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சன்ட் என்கிற பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார்.
இந்த திருமண விழாவில் பாலிவுட் பிரபலங்களில் துவங்கி கோலிவுட் வரை அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். சில பிரபலங்களுக்கு பத்திரிகை வைத்து அவர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை.
உலக பணக்காரர்களில் டாப் 10 வரிசையில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஏற்கனவே திருமணம் செய்திருந்த நிலையில் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.
ஆகாஷ் அம்பானிக்கு கூட இவ்வளவு பிரமாண்டமாக திருமணம் நடக்கவில்லை. ஆனால் ஆனந்த் அம்பானிக்கு மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கான செலவு மட்டும் 5000 கோடி என்று கூறப்படுகிறது.
இதுவரை வரலாற்றில் நடந்த அதிக செலவுமிக்க திருமணங்களில் ஒன்றாக முகேஷ் அம்பானி வீட்டில் நடந்த திருமணம் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது இவ்வளவு செலவு செய்து இந்த திருமணத்தை நடத்துவதற்கு காரணம் முகேஷ் அம்பானியின் செல்ல பிள்ளை ஆனந்த் அம்பானிதான் என்று கூறப்படுகிறது.
அவரை திருமணம் செய்திருக்கும் ராதிகாவும் கோடீஸ்வர வீட்டு பெண்ணாவார். பொதுவாகவே கோடீஸ்வரர்கள் இன்னொரு கோடீஸ்வரர் வீட்டில் தான் பெண் எடுப்பார்கள் என்பதால் இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரபல சினிமா நடிகர் நாகார்ஜுனாவும் கலந்து கொண்டார். அதே சமயம் நடிகர் ரஜினிகாந்த் அம்பானி வீட்டு கல்யாணம் மட்டும் மற்றும் லூலூ மால் நிறுவனத்தின் ஓனர் வீட்டு திருமணத்திலும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் நாகார்ஜுனாவின் பழைய பேட்டி ஒன்று சமீபத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதில் திருமண விழாக்களில் திரை பிரபலங்கள் கலந்து கொள்வதற்கு பணம் வாங்குகிறார்கள் என்று நகைச்சுவையாக கூறியிருந்தார் நாகார்ஜுனா. இந்த பேட்டியை தற்சமயம் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் இதை யாரை குறிப்பிட்டு ட்ரெண்ட் செய்கின்றனர் என்று தெரியவில்லை.