தமன்னாவுடன் அதிக நேரம் தனியாக செலவழிக்க விரும்பினேன்.. ஓபன்னாக பேசிய பிரபல நடிகர்!!
இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகை தமன்னா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த அரண்மனை திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் நீண்ட நாட்களாக டேட்டிங் செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாக அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தகவல் வந்துகொண்டு இருக்கிறது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட விஜய் வர்மா, தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், என்னுடைய திரைப்படங்கள் வெளியாகுவதை குறித்த விஷயங்களைவிட எங்களுடைய டேட்டிங் விஷயத்தை தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த விஷயத்தை முதலில் தெரிந்துகொண்ட போது அதிர்ச்சி அடைந்தேன்.ஆனால் இப்போது அது பழகிவிட்டது. எனக்கும் தமன்னாவுக்கும் இடையே ஆழமான, அன்பான பந்தம்தான் இருக்கிறது. லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தில் நடித்த சமயத்தில் நாங்கள் டேட்டிங் செய்யவில்லை,நாங்கள் ஒரு பார்ட்டி ஒன்றை நடத்த திட்டமிட்டு இருந்தோம்.
அந்த பார்ட்டியில், நான்கு பேர் மட்டுமே கலந்துகொண்டார்கள். அதற்கு காரணம், நான் தமன்னாவுடன் அதிக நேரம் தனியாக செலவழிக்க விரும்பினேன் என்று விஜய் வர்மா கூறியுள்ளார்.
உங்களுக்கு எப்போது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது திருமணம் செய்துகொள்ளுங்கள். திருமணம் என்பது பார்ட்டி இல்லை, அது மிக பெரிய பொறுப்பு. மற்றவர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்பதால் ன்பதாலோ மணமுடிக்க கூடாது என்று விஜய் வர்மா தெரிவித்துள்ளார்.