காதல் கணவரின் சுயரூபம், ரெண்டு மாசம் கூட தாங்காது போல.. தேன்நிலவு கொண்டாட போய் பஞ்சாயத்தை ஆரம்பித்த நடிகை

காதல் கணவரின் சுயரூபம், ரெண்டு மாசம் கூட தாங்காது போல.. தேன்நிலவு கொண்டாட போய் பஞ்சாயத்தை ஆரம்பித்த நடிகை

 சமீபத்தில் வாரிசு நடிகையின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. ஏற்கனவே காதல் தோல்வி, ஏமாற்றம், துரோகம் என நடிகை சோகத்தில் இருந்தார். அதனால் கல்யாணமே வேண்டாம் என்று கூட பிடிவாதம் பிடித்தார்.

பிறகு எப்படியோ பணக்கார மாப்பிள்ளையை பிடித்து தற்போது திருமணமும் செய்து கொண்டார். ஊரைக் கூட்டி நடந்த இந்த கல்யாணத்தில் பல சொத்துக்கள் கை மாறியதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

அதேபோல் மாப்பிள்ளையும் பெரிய இடம் என்பதால் நடிகை விலைமதிப்புள்ள பரிசுகளை வாங்கி சந்தோஷமாகவே இருந்திருக்கிறார். ஆனால் தேனிலவு சென்ற பிறகுதான் கணவரின் சுயரூபமே தெரிந்ததாம்.

பகலில் கண்ணே மணியே என கொஞ்சி காதல் வசனம் பேசிய கணவர் இரவில் தன் இன்னொரு முகத்தை காட்டியிருக்கிறார். அதாவது நடிகையை திட்டுவது கோபப்படுவது என இருந்திருக்கிறார் புது மாப்பிள்ளை

இது என்ன புது டிவிஸ்ட் என பயந்து போன நடிகை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து இருக்கிறார். ஆனால் இது எல்லை மீறி போகவே தேனிலவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என அடித்துப் பிடித்து அங்கிருந்து கிளம்பி விட்டாராம்.

இதனால் மிரண்டு போன காதல் கணவரும் மனைவியை சமாதானம் செய்து கொஞ்சி பேசி இருக்கிறார். ஆனாலும் நடிகை சம கடுப்பில் இருக்கிறாராம். ஏற்கனவே இந்த ஜோடி ரொம்ப காலம் சேர்ந்து இருக்க மாட்டார்கள் என வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

கடைசியில் தேனிலவிலேயே பிரச்சனை ஆரம்பித்து விட்டது. தற்போது நடிகை சமாதானம் அடைந்தாலும் எப்போது வேண்டுமானாலும் அடுத்த பஞ்சாயத்து வரும் என்கின்றனர். போற போக்கை பார்த்தால் இரண்டு மாதம் கூட தாங்காது போல.

LATEST News

Trending News

HOT GALLERIES