ஷூட்டிங்கில் எப்படி இருப்பார்ன்னு தெரியும்!! வடிவேலு பற்றிய உண்மையை உடைத்த பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் சிறுசிறு ரோலில் நடித்து காமெடி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை பிரேம பிரியா. வடிவேலுவுடன் சில படங்களில் இணைந்து நடித்து வந்த பிரேம பிரியாவிற்கு சில வருடங்களாக பல சோகங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அப்பா, மாமனார், கணவர் என்று அடுத்தடுத்த மரணங்கள் பிரேம பிரியாவை தனிமையில் கொண்டு சென்றதாக சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் நடிகர் வடிவேலு தன்னை வளர விடாமல் என்னை இந்த நிலைக்கு மாற்றிவிட்டார் என்றும் அவரால் தான் என் வாழ்க்கையே போச்சு என்றும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து நடிகை ஷகீலா, வடிவேலுவை இப்படி பேசிட்ட, அவரிடம் இருந்து மிரட்டல் வந்ததா என்று கேட்டுள்ளார். ஆமாம் ஒரு நம்பரில் இருந்து மறுப்பு சொல்லி வீடியோ போடனும் சொன்னாங்க, ஆனா நான் மாட்டேன்னு சொல்லிட்டேன் என்று பிரேம பிரியா தெரிவித்திருக்கிறார்.
இதை ஏன் முன்னேடியே சொல்லல என்று ஷகீலா கேட்டதற்கு, முன்னாடி மீடியா வசிதியில்லை, எனக்கும் வடிவேலுவுக்கு மீடூ பிரச்சனை இல்லையே என்று தெரிவித்துள்ளார். இப்போ நீ சொல்றது மீடூ பிரச்சனை இல்லன்னு சொல்லலாம், வடிவேலுவை எனக்கும் தெரியும், அவர் என்ன எதிர்ப்பார்ப்பார்ன்னு எனக்கும் தெரியும் என்று ஷகீலா தெரிவித்திருக்கிறார்.
சுறா படத்தில் வடிவேலுவை நேரடியாகவே கேட்டேன், ஏன் வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்றிங்கன்னு. நான் அவர் படத்தில் நடிக்க கூடாதுன்னு இருந்தார்.
மேலும் ஷகீலா, வடிவேலு உங்களை ரொம்ப நல்லா தெரியும், இதுபோல் நிறைய பேர் உங்கள பத்தி சொல்றாங்க, நீங்க எப்படி இந்த இடத்திற்கு வந்தீங்கன்னு தெரியும், நடுவில் நடிக்க முடியாமல் போக சின்ன சின்ன நடிகர்களை வளரவிடாமல் தடுத்ததற்கு அனுபவிக்கிறீங்கன்னு ஷகீலா தெரிவித்துள்ளார்.