ஹீரோக்கள் அதற்கு ஆசைப்பட்டு பாம்பே நடிகைகளை வர சொல்லிகிறார்கள்!!

ஹீரோக்கள் அதற்கு ஆசைப்பட்டு பாம்பே நடிகைகளை வர சொல்லிகிறார்கள்!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தயாரிப்பு நிறுவனமாக ஏவிஎம் இருக்கிறது. இந்த நிறுவனம் சிவாஜி படத்திற்கு பின் எந்த ஒரு பெரிய பட்ஜெட் படங்களை எடுக்கவில்லை. 

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஏவிஎம் குமரன், தற்போது இருக்கும் தமிழ் சினிமா குறித்து பேசியுள்ளார். அதில், இந்த காலத்தில் நடிகர்கள் எந்த படத்தில் நடிக்கிறாங்க, இயக்குநர்கள் என்ன கதையை இயக்குறாங்க என்பதே தெரியவில்லை. ஒரு படத்தின் கதை எங்கயோ ஆரம்பித்து எங்கயோ முடிகிறது. 

ஹீரோக்கள் வெள்ளை தோலுக்கு ஆசைப்பட்டு பாம்பே ஹீரோயின்களை கேட்கின்றனர். அவர்களுக்கு சரியாக நடிக்க தெரியவில்லை. மொழியும் புரியவில்லை. டப்பிங் ஆர்டிஸ்ட் தான் அவர்களின் நடிப்புக்கு தங்கள் குரல் மூலம் உயிர் கொடுக்க முயல்கின்றனர். 

மலையாள சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்து 100 கோடி 200 கோடி வசூல் செய்கிறார்கள். அது தான் சினிமா வியாபாரம். 

ஆனால் படத்தின் பட்ஜெட் 200 கோடி வசூல் 100 கோடி கூட தாண்டாமல் இருப்பது எப்படிபட்ட பிசினஸ் என்று எனக்கு புரியவில்லை என ஏவிஎம் குமரன் கூறியுள்ளார்.  

LATEST News

Trending News

HOT GALLERIES