கமல் படத்தில் நடிக்க அட்ஜஸ்ட் பண்ணேன்!! ஓபன்னாக பேசிய நடிகை.!
90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. முன்னணி ஹீரோக்களுக்கு சமமாக இவருக்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தற்போது இவர் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும், சில படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை மீனா, "கமல் நடித்த தேவர் மகன் படத்தில் முதல் முதலில் நான் நடிக்க வேண்டியது. இத்தனைக்கும் முதல் நாள் ஷூட்டிங் போயிட்டு 2,3 மேக்-கப் போட்டு பார்த்தார்கள். ஷூட்டிங் ஒரு ஒரு சீன் கூட முடிச்சோம். அடுத்த நாள் எடுத்த காட்சியை போட்டு பார்த்தார்கள். கமல் சாருக்கு அவரது கெட்டப்பில் திருப்தி இல்லை அதனால் ஷூட்டிங் தாமதம் ஆனது".
"அந்த 10 நாள் என்ன பண்றதுனே தெரியல. ஆனா.. நாங்கள் கொஞ்சம் இப்படி அப்படிலாம் அட்ஜஸ்ட் பண்ணோம், ரீ-ஷூட் பண்ணோம், மறுபடியும் ஷூட்டிங் கேன்சல்னு என்று சொன்னார்கள். அதன் பின் அவர்கள் என்னுடைய டேட்ஸ் கேட்கும் போது என்னால் கொடுக்கமுடியவில்லை. அந்த சமயத்தில் நான் பிஸியாக இருந்தேன்" என்று மீனா கூறியுள்ளார்.