இதை மட்டும் பண்ணுங்க; நான் நிர்வாணமா நடக்குறேன்.. பயப்பட மாட்டேன் - நடிகை பகீர்

இதை மட்டும் பண்ணுங்க; நான் நிர்வாணமா நடக்குறேன்.. பயப்பட மாட்டேன் - நடிகை பகீர்

இதை மட்டும் நீங்கள் நிரூபித்தால் கடற்கரையில் நிர்வாணமாக நடப்பேன் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். 

தெலுங்கு சினிமாவில் பல நட்சத்திரங்களின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இதனிடையே நடிகர் பவன் கல்யாணுக்கு எதிராகவும் சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது ரசிகர்கள் ஸ்ரீரெட்டியை கண்டித்து வந்தனர். மேலும், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தோல்வியை தழுவினால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நிர்வாணமாக நடப்பேன் என்று அவர் கூறியதாகவும் தகவல் ஒன்று பரவியது. இந்நிலையில் ஆந்திராவில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துள்ளது.

இதனால் எப்போது நிர்வாணமாக நடப்பீர்கள் என்று பலரும் ஸ்ரீ ரெட்டியிடம் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள ஸ்ரீரெட்டி, "நான் நிர்வாணமாக நடப்பேன் என்று எப்போதும் சொன்னது இல்லை.

அப்படி சொன்னேன் என்று ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள். எனது சமூக வலைத்தள பக்கத்திலிருந்து எதையும் நான் நீக்கவில்லை. ஒருவேளை நான் அப்படி சொன்னேன் என்று நீங்கள் நிரூபித்தால், கண்டிப்பாக விசாகப்பட்டினம் கடற்கரையில் நிர்வாணமாக நடப்பேன். உங்களுடைய கேலிக்கும், கிண்டலுக்கும் பயப்படுகிறவள் நான் இல்லை. உங்களை துணிச்சலாக எதிர்கொள்வேன்'' என்று தெரிவித்துள்ளார். 

LATEST News

Trending News