மேகா ஆகாஷை விட அவங்க அம்மா சூப்பர்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தானம் செய்த விஷயம்
காமெடியான நடித்து பிரபலமான நடிகர் சந்தானம், தற்போது ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த வடகுக்கப்பட்டி ராமசாமி படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து இருந்தனர்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய பிரபல சினிமா பத்திரிகையாளர் பரமேஸ்வரன், சந்தானம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், வடகுக்கப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றி விழாவில் பேசிய அந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி, மாமா ஹீரோயின் மேகா ஆகாஷ்விட அவங்க அம்மா சூப்பர் ரா இருக்காங்க -னு என்று சந்தானம் கூறியதாக இயக்குனர் சொன்னார்.
ஜாலியான விஷயத்தை சொல்லுகிறேன் என்று நினைத்து சந்தானத்தை காலி செய்துவிட்டார் அந்த இயக்குனர். மேடையில் அப்படி சொன்னவுடன் சந்தானத்துக்கு சங்கட்டம் ஏற்பட்டது.
உடன் நடிக்கும் ஹீரோயினை அப்படி சொன்னால் கூட பரவல. பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் நடிகையின் அம்மாவை சொன்னது பெரிய விஷயமாகும். சந்தானம் மேகா ஆகாஷ் அம்மா மீது Crush ஆ அப்படி தப்பா புரிஞ்சுபாங்க. இந்த விஷயத்தால் சந்தானம் ரொம்பவே அப்செட்டா இருந்தார் என்று பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.