எப்படியான புருஷன் ..! நல்லா பண்ணுற ஒரு ஆள் தான் எனக்கு வரணும்..! விஜய் டிவி சுனிதா ஓப்பன் டாக்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவர் சுனிதா. இவர் ஏற்கனவே டான்ஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பெற்றவர்.
தமிழ் பேசத் தெரியாமல் இவர் பேசும் கொச்சையான தமிழை ரசிப்பதற்கென்று தனியாக ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழ் வார்த்தைகளை தவறாக உச்சரிப்பதை வைத்து விஜய் டிவி இவருக்கு என ஒரு டிரண்டிங்கை உருவாக்கி விட்டது. அதனால் விஜய் டிவி சுனிதா என்றே அழைக்கப்படுகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் சுனிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஜோடி பாய்ஸ் வெர்ச்ஸ் கேர்ள்ஸ் போன்ற டான்ஸ் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்று பிரபலமடைந்தவர். தனுஷ் நடித்த 3 படத்தில் சுருதிஹாசனுக்கு தோழியாக நடித்திருக்கிறார். இன்னும் சில சீரியல் களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார்.
அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை, தனது வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்கள் மனதில் கிறக்கத்தை ஏற்படுத்துகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் நடனமாடியதன் மூலம் இவருக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தும், பெரிய அளவில் சினிமாவில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் குக் வித் கோமாளி இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு தமிழ் தெரியாது என்றாலும், தமிழ் பாடல்களை பாடுவது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. குறிப்பாக கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற மாங்குயிலே பூங்குயிலே என்ற பாடலை பாடி இவர் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தார்.
இதற்கிடையே அவர் சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கி அதன் மூலம் தினமும் நிறைய வீடியோக்களை வெளியிட்டு அதன்மூலம் கணிசமான வருமானத்தை பார்த்து வருகிறார். அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களை வெளியிட்டு அதன்மூலம் பிரபலமாகி கொண்டிருக்கிறார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் விஜய் டிவி சுனிதாவிடம் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது.
அதன்படி உங்களுக்கு எப்படியான நபர் புருஷனாக வர வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு சுனிதா அளித்த பதிலாவது,
நல்லா லவ் பண்ணக்கூடிய ஒரு ஆள்தான் எனக்கு புருஷனா வரணும். இன்றைக்கு ஆடம்பரமான விஷயம் என்றால் பணமோ, காரோ, பங்களாவோ அவர் வாங்கக்கூடிய சம்பளமோ கண்டிப்பாக கிடையாது.
இன்றைக்கு திருமணமான தம்பதிகள் இடையே காணப்படக்கூடிய ஆடம்பரமான பொருள் என்றால் அதுதான் நம்பிக்கை, உனக்கு நான் எனக்கு நீ என்று மட்டும் இருக்கக்கூடிய அந்த நம்பிக்கை, எந்த நபரிடம் வருகிறதோ அந்த ஆள் தான் எனக்கு புருஷனா வரணும் என பேசி இருக்கிறார் நடிகை சுனிதா.
நல்லா லவ் பண்ணுற ஒரு ஆள்தான் எனக்கு புருஷனா வரணும் என்று விஜய் டிவி சுனிதா வெளிப்படையாக பேசியிருப்பது வைரலாகி வருகிறது.
ஆனால் இப்படி எல்லாம் பேசுகிற சில நடிகைகள், திருமணத்துக்கு பிறகு சில மாதங்களில், சில ஆண்டுகளில் கணவன்களை விவாகரத்து செய்வதுதான் ஏனென்று தெரிவதில்லை என்று ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்துள்ளனர்.