என்னோட அந்த உறுப்பை விரலால் பிடித்து அப்படி செய்தார்.. துடித்து போய்விட்டேன்.. ரெஜினா ஓப்பன் டாக்..
இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் பரவலாக சொல்லப்படுகிறது ஒரு வார்த்தை அட்ஜஸ்ட்மென்ட். பொதுவாக பெண்கள், ஆண்களின் ஆசைக்கு இணங்கி நடக்க வேண்டுமென்பதை இந்த ஆங்கில வார்த்தையில் மறைமுகமாக சொல்லப்படுகிறது.
அரசு துறை, தனியார் துறை, சினிமா, கல்வி நிறுவனங்கள், தொழில் கூடங்கள் என, எத்தனையோ இடங்களில் பணத்துக்காக, பதவிக்காக, வாய்ப்புக்காக பெண்கள் இந்த அட்ஜஸ்ட்மென்ட் என்ற விஷயத்தை விரும்பியோ, சகித்துக்கொண்டோ ஏற்றுக்கொள்ளவே செய்கின்றனர்.
அதிலும் கோடி கோடியாக பணம் கொட்டும் தமிழ் சினிமாவில், பட வாய்ப்புகளை தேடும் நடிகைககள் மட்டுமின்றி, நடிகைகளின் அம்மாக்களும் அட்ஜஸ்ட்மென்ட் விவகாரத்தை எதிர்கொள்ளவே செய்கின்றனர்.
தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான இளம் கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார்.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுடன், சரவணன் இருக்க பயமேன் என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் ஒரு பாடல் காட்சியில் தாராள கவர்ச்சி காட்டி ரசிகர்களை அசத்தியிருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படமான மாநகரம் படத்திலும் நடித்துள்ளார்.
ரெஜினா கசாண்ட்ரா, இப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜீத்குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகிறார். இதில் வில்லன் கோஷ்டியை சேர்ந்த ஆரவ்வுக்கு ஜோடியாக நடித்திருக்கிார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில், தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட் சம்பவம் குறித்து ரெஜினா கசாண்ட்ரா வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியதாவது,
ஒருமுறை என்னை போனில் அழைத்து பேசும்போது, அட்ஜஸ்ட்மென்ட் பண்றீங்களா எனக் கேட்டனர். நான் ஏதோ சம்பளத்தில்தான் அட்ஜஸ்ட்மென்ட் கேட்கிறார்கள் என்று தவறாக நினைத்துவிட்டேன். ஆனால் அதற்கு பிறகுதான், அவர்கள் கேட்ட அட்ஜஸ்ட்மென்ட் வேறு என்பதே எனக்கு தெரிய வந்தது.
அதன்பின் அப்படி ஒரு அனுபவத்தை நான் சினிமாவில் சந்திக்கவில்லை. இது சினிமாவில் மட்டும் இல்லை. எல்லா இடங்களிலும் இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னை நடந்து கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் ஒரு சூப்பர் மார்க்கெட் சென்றாலும் அங்கு ஒரு கதை இதுபோல் நடந்து கொண்டுதான் இருக்கும்.
நான் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த போது ஒருமுறை, அடையாளம் தெரியாத ஒரு நபர் என் முன்னால் நடந்து வந்தார். என் உதட்டில் கை வைத்து தடவி தவறாக நடந்துக்கொண்டார், என்று அதில் ரெஜினா கூறியிருக்கிறார்.
அவர் ஏற்கனவே சில நேர்காணல்களில் இதுபற்றி கூறியிருந்தாலும், இப்போதும் அந்த தகவல் வைரலாகி வருகிறது.
என்னோட உதட்டை விரலால் பிடித்து தடவி அப்படி செய்தார். துடித்து போய்விட்டேன் என்று ரெஜினா ஓப்பனாக பேசிய அந்த தகவல், ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.