ஒரே நைட் தான்.. 4 மாசம்.. காதலன் செய்த வேலை.. பிரியா பவானி ஷங்கர் கண்ணீர்..!

ஒரே நைட் தான்.. 4 மாசம்.. காதலன் செய்த வேலை.. பிரியா பவானி ஷங்கர் கண்ணீர்..!

பிரியா பவானி ஷங்கர் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி. 1989 டிசம்பர் 31ம் தேதி சென்னையில் பிறந்த இவர், தனது கல்லூரி படிப்பை முடித்த பின்னர், தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

பிரபலமான “கல்யாணம் முதல் காதல் வரை” என்ற தொடரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அதன் பின்னர், “மேயாத மான்”, “கடைக்குட்டி சிங்கம்”, “மான்ஸ்டர்”, “யானை”, “திருச்சிற்றம்பலம்” போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.

தற்போது, “டிமாண்டி காலனி 2”, “ரத்னம்”, “இந்தியன் 2” போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

பிரியா பவானி ஷங்கர் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை பார்க்கலாம். இவர் ஒரு எலக்ட்ரானிக்ஸ் பொறியாளர்.தனது படிப்பை முடித்த பின்னர், ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். “பிக்பாஸ் தமிழ்” நிகழ்ச்சியின் ஒரு சீசனில் சிறப்பு விருந்தினாராக பங்கேற்றார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது ரசிகர்களுடன் அடிக்கடி தொடர்பில் இருப்பார்.

பிரியா பவானி ஷங்கர் ஒரு திறமையான நடிகை மட்டுமல்லாமல், ஒரு நல்ல பேச்சாளரும், சமூக சேவகியும் ஆவார்.

இந்நிலையில், தன்னுடைய காதலன் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், என்னுடைய ஆண் நண்பர் ராஜவேலு வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்த சமயம் அது.

அப்போது என்னை பார்க்க வருவதற்காக 4 மாசம்.. அங்கு பார்ட் டைம் வேலை பார்த்து காசு சேர்த்து.. என் பிறந்தநாளில் இந்தியாவுக்கு வந்து எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.

ஒரு நைட் தான் இங்கே இருந்தார். அடுத்த நாளே அவர் மீண்டும் கிளம்பி வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். அவர் அந்த 4 மாசம் சம்பாதித்த பணம் பிளைட் டிக்கெட்டிற்கே சரியா போச்சு. ஆனாலும், அவ்வளவு கஷ்டப்பட்டு என்னை பார்க்கவந்தார்.. எனக்கு கண்ணீர் வந்து விட்டது என பிரியா பவானி ஷங்கர் மிகவும் நெகிழ்ச்சியோடு அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES