வலிக்காதுன்னு சொல்லி குத்துனாங்க.. ஆனா.. நெறைய விஷயங்கள் பண்ண வேண்டி இருக்கு… லவ்டுடே இவானா ஓப்பன் டாக்..

வலிக்காதுன்னு சொல்லி குத்துனாங்க.. ஆனா.. நெறைய விஷயங்கள் பண்ண வேண்டி இருக்கு… லவ்டுடே இவானா ஓப்பன் டாக்..

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துவருபவர் நடிகை இவானா. நாச்சியார் என்ற படத்தில் வேலைக்கார பெண்ணாக நடித்திருப்பார். இந்த படத்தில் இவானா ஜோடியாக, ஜிவி பிரகாஷ் நடித்திருப்பார்.

ஆனால் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்த லவ்டுடே படத்தில் நடித்த பிறகு மிக பிரபலமான நடிகையாக ரசிகர்களிடம் வரவேற்பு இவானாவுக்கு கிடைத்திருக்கிறது.

காதலர்கள் மொபைல் போன்களை மாற்றிக்கொண்டால், அவர்களுக்குள் ஏற்படும் சிக்கல்களை மையப்படுத்தி இந்த படம் பெரிய அளவில் வெற்றிப் பெற்றது.

லவ்டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதன், ராதிகா, சத்யராஜ், இவானா உள்ளிட்ட அனைவரது நடிப்புமே மிகவும் சிறப்பாக இருந்தது.

இந்த படத்துக்கு பிறகு, இப்போது விஜய் நடித்து வரும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடிக்க இவானாவுக்கு அழைப்பு வந்தது.

நடிகர் விஜய்க்கு தங்கையாக நடிக்க வந்த வாய்ப்பை, வேண்டாம் என இவானா மறுத்துவிட்டார்.

விஜய் படம் என்பதால் தங்கை கேரக்டரில் நடிக்க சம்மதித்தால் தமிழ் சினிமாவில் அடுத்து தங்கை கேரக்டரில் நடிக்கவே வாய்ப்புகள் வரும். அதை மாற்ற முடியாது.

இப்போது ஹீரோயின் கேரக்டரில் நடித்து வரும் நிலையில், தங்கை கேரக்டர் வேறு வழியில் திரை பயணத்தை மாற்றி விடும் என்பதால், விஜய் படத்தில் நடிக்க முடியாது என நோ சொல்லி விட்டார் இவானா.

லவ்டுடே படத்தில் மாமா குட்டி என்ற கேரக்டருக்கே பெருமை சேர்த்த இவானாவை, ரசிகர்கள் சிலர் மாமா குட்டி என்றுதான் செல்லமாக அழைக்கின்றனர்.

லவ்டுடே படத்தில் நடித்தது குறித்து நேர்காணல் ஒன்றில் லவ்டுடே நாயகி இவானா கூறியதாவது,

ஹீரோயினாக நடிப்பதற்காக நிறைய விஷயங்கள் பண்ண வேண்டியிருக்கு. நெயில்பாலிஷ், பொட்டு, மூக்குத்தி, படத்தில் அந்த கன் சூட் பண்ணி மூக்குத்தி குத்தியது உண்மையில் பண்ணியதுதான்.

அவங்க என்ன சொன்னாங்கன்னா, வலிக்காது. அதுல நீடில் எதுவும் இல்லே. வலிக்காதுன்னு சொல்லிதான் குத்துனாங்க.

எனக்கு மூக்குத்தி இல்லே. ஆனா நீடில் இல்லாமல் டக்குன்னு அடிச்சாங்க. நீடில் இல்லாததால் வலிக்காது. சும்மாதான்னு சொல்லி கொண்டு வந்தாங்க, அடிச்சாங்க. ஆனா செம்ம வலி.

ஆனா பிரதீப் பண்ணும்போது வலிக்கலேன்னு சொன்னாங்க, ஆனா முகத்தை வலிச்ச மாதிரி ரியாக்சன் பண்ணுனாங்க. கேட்டதுக்கு அப்படித்தான் வலிக்கிற மாதிரி காட்டணுமுன்னு பொய் சொல்லிட்டாங்க.

வலிக்காதுன்னு சொல்லி குத்துனாங்க.. ஆனா.. மூக்குத்தி குத்தியது பயங்கரமா வலிச்சது. இப்படித்தான் கதாநாயகின்னா நெறைய விஷயங்கள் பண்ண வேண்டி இருக்கு என்று லவ்டுடே கதாநாயகி இவானா ஓப்பனாக பேசியிருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES