தளபதி68 படத்தில் நடிக்க மறுத்த இளம் நடிகை! அந்த ரோல் வேண்டவே வேண்டாம்
நடிகர் விஜய் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் கூட்டணி சேர்ந்து இருக்கும் படம் தளபதி68. சென்னை, தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்தகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் பிரபுதேவா, பிரஷாந்த், சினேகா, லைலா, ஜெயராம், விடிவி கணேஷ், மைக் மோகன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
மேலும் விஜய்க்கு தங்கை ரோலில் நடிகை இவானா நடிக்க இப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி பரவியது. லவ் டுடே படத்திற்க்கு பிறகு இவானாவுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு இது என்றும் பேசப்பட்டது.
ஆனால் இவானா தளபதி 68 படத்தில் நடிக்கவில்லையாம், அவருக்கு வாய்ப்பு வந்தது உண்மை தான், ஆனால் அது தங்கை ரோல் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இவானாவுக்கு வந்த ரோலில் நடித்தால் இனி அதே போன்ற ரோல்கள் தான் தொடர்ந்து வரும். அதனால் அதை வேண்டாம் என கூறிவிட்டாராம்.
இந்த தகவல் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.