பெரும் சர்ச்சை.. கெட்ட பெயர்.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேறும் கமல்..
கடந்த 2017ஆம் ஆண்டு பிரமாண்டமான முறையில் விஜய் டிவியில் துவங்கிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ். தொடர்ந்து 7 சீசன்களாக வெற்றிகரமான முறையில் நடைபெற்று வருகிறது.
ஆனால், எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு சீசன் 7 மூலம் கமல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். குறிப்பாக பிரதீப் விஷயத்தில் கமல் செய்தது குறித்து ரசிகர்கள் பலரும் எதிர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதே போல் நெட்டிசன்கள் பலரும் கமலை கிண்டல் செய்து பல விஷயங்களை செய்து வரும் இந்த சமயத்தில் கமல் ஒரு அதிரடி முடிவு செய்துள்ளாராம்.
அதாவது இனி வரும் அடுத்தடுத்த பிக் பாஸ் சீசன்களை கமல் தொகுத்து வழங்கப்போவதில்லையாம். பிக் பாஸ் 7 தான் கமல் ஹாசனின் கடைசி சீசன் என்று கூறப்படுகிறது.
அடுத்த பிக் பாஸ் 8 சீசனை வேறொரு நட்சத்திரம் தான் தொகுத்து வழங்க போகிறார் என்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் இது உண்மையான தகவலா என்று.