இதுவரை கல்யாணம் செய்யாததற்கு காரணம் இதுதான்- ஓபனாக பேசிய நடிகர் விஷால்.
தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் ஹிட் படம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளார். அவரது கடைசி படங்கள் எதுவும் சரியாக ஹிட் அடிக்கவில்லை, எனவே அவரது ரசிகர்கள் ஆவலாக வரவேற்ற படம் தான் மார்க் ஆண்டனி.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி விஷால், எஸ்.ஜே. சூர்யா, சுனில், செல்வராகவன், ரிது வர்மா என பலரும் நடித்துள்ளனர்.
ரூ. 100 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூலித்து விஷால் திரைப்பயணத்தில் ஹிட் படமாக அமைந்துள்ளது.
அண்மையில் யூடியூப் பேட்டியில் நடிகர் விஷால் பேசும்போது, திருமணம் என்பது சாதாரணமான விஷயம் இல்லை, அதற்கு புரிதல், பக்குவம் வேண்டும். திடீரென ஒரு முடிவு எடுத்துவிட்டு பின் என்ன இப்படி ஆகிவிட்டதே என யோசிக்கக்கூடாது.
ஏனெனில் திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது, எனக்கும் நிறைய பொறுப்புகள் உள்ளது.
அந்த விஷயம் எல்லாம் முடிந்து, என் வாழ்க்கையிலும் திருமணம் நடக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தால், அது என் வாழ்க்கையில் நிச்சயமாக நடக்கும் என பேசியுள்ளார்.