விமல் நடித்த 'துடிக்கும் கரங்கள்': ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

விமல் நடித்த 'துடிக்கும் கரங்கள்': ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விமல் நடித்த ’துடிக்கும் கரங்கள்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

விமல் நடித்த ’தெய்வ மச்சான்’ மற்றும் ’குலசாமி’ ஆகிய இரண்டு படங்கள் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில் தற்போது அவர் ‘சண்டைக்காரி’ ’எங்க பாட்டன் சொத்து’ ’மஞ்சள் கூடை’ ‘லக்கி’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விமல் நடித்து முடித்துள்ள ’துடிக்கும் கரங்கள்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் தற்போது இந்த படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விமல், மிஷா நரங், சதீஷ், செளந்தர் ராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த த படத்தை வேலு தாஸ் என்பவர் இயக்கியுள்ளார். ராகவ் பிரசாத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை கே அண்ணாதுரை என்பவர் தயாரித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES